முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை: விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறையாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் துறையாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறையாகவும் ஜவுளித்துறை விளங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் முதுகெலும்பாக செயல்படுபவர்கள் விசைத்தறி உரிமையாளர்கள். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மின்கட்டண உயர்வு, வாடகை உயர்வு, உதிரிபாகங்கள் உயர்வு என செலவினங்கள் அதிகரித்து விட்டதால், செலவுக்கேற்ப தங்கள் ஊதியம் உயர்த்தப்பட வேண்டுமென்றும், 1991-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஊதியம் உயர்த்தப்பட்டது என்றும், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 சதவீத ஊதிய உயர்வுக்கான உடன்பாடு ஏற்பட்டது என்றும், ஆனால், இந்த ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், இந்த நிலையில் 2022-ம் ஆண்டு ஊதிய உயர்வு உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு பிரிவினரும், புதிய ஊதிய உயர்வு கோரி மற்றொரு பிரிவினரும் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் ஊதிய உயர்வு குறித்து எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. 2022-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிற நிலையில், முதல்வர் இதில் நேரடியாக தலையிட்டு, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தையும், ஜவுளி உற்பத்தியாளர்களையும் அழைத்துப் பேசி விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து