முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெதுவான பந்துவீச்சு: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

அகமதாபாத்: மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் வெற்றி...

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 217/6 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

கூடுதல் அபராதம் ஏன்? 

ஏற்கனவே, சி.எஸ்.கே. உடனான போட்டியில் ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டனான ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஐ.பி.எல். தொடரில் இது ராஜஸ்தான் அணிக்கு 2ஆவது முறை என்பதால் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் இரட்டிப்பாக்க விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து