முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெகு விமர்சையாக நடந்த சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Chennimalai 2025-04-11

Source: provided

ஈரோடு : சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை ஒட்டி, வள்ளி, தெய்வானை சமேதரராக மலர் அலங்காரத்தில் அருள் பாலித்த சென்னிமலை முத்துக்குமாரசுவாமி.

விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி, அதிகாலை, கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, சுவாமிகள் தேரில் அமர வைக்கப்பட்டனர். தேருக்கு கற்பூரம் ஏற்றப்பட்டு வடம் பிடிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வடக்கு ராஜ வீதி சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று மாலையில், மீண்டும் தேர் இழுக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை அடிவாரத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (சனி) காலை 9 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது. 13-ம் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் மற்றும் மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ர.பழனிவேல், கோயில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளர் சி.மாணிக்கம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மு.மனோகரன், வே.செ.பாலசுப்பிரமணியம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து