முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      இந்தியா
Modi

வாரணாசி, நாட்டிற்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி’ என்பதேயாகும்  என்று  பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.3,880 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 44 திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.  

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டிற்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் ‘எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி’ என்பதேயாகும். இந்த உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

இதற்கு நேர்மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள், நாட்டின் நலனில் அக்கறை கொள்ளாமல், தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டமே கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காகவே, இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மட்டுமே அரசியல் விளையாட்டுகளை விளையாடும் இவர்களின் கொள்கை ‘குடும்பத்துக்கே ஆதரவு குடும்பத்துக்கே வளர்ச்சி’ என்பதாகும்.

கடந்த காலங்களில் பூர்வாஞ்சலில் (உத்தரப்பிரதேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி) சுகாதார வசதிகள் இல்லை. ஆனால், இன்று காசி சுகாதார தலைநகராக மாறி வருகிறது. இன்று இந்தியா வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாகக் கொண்டு முன்னேறி வருகிறது. நமது காசி இதற்கு சிறந்த முன்மாதிரியாக மாறி வருகிறது. இந்தியாவின் ஆன்மா அதன் பன்முகத்தன்மையில் வாழ்கிறது, காசி அதன் மிக அழகான படம். 2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்ய எனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து