முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் யு.பி.ஐ. சேவை பாதிப்பு வாடிக்கையாளர்கள் கடும் அவதி

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      இந்தியா
UPI

புதுடெல்லி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் யு.பி.ஐ. சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யு.பி.ஐ. சேவை பாதிக்கப்பட்டன.

கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாதததால், வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுபோன்ற குறைபாடுகளை கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் என்ற வலைதளத்தின்படி, பகல் 12.56 மணி வரை 2,147 புகார்கள் பதிவாகியுள்ளன. 80 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் இருந்துள்ளனர்.

இன்றைய நாளின் தொடக்கத்தில் 1,168 புகார்கள் பதிவாகியிருந்தன. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலிழப்பு மூலம், ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடாக் மகேந்திரா வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பின்னர் நேற்று மாலை படிபடியாக சரியானது.

இதனிடையே இந்த வாரத்தின் தொடக்கத்தில், என்.பி.சி.ஐ. வெளிநாடுகளுக்கான யு.பி.ஐ. பரிமாற்றத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. பணம் செலுத்துவோரின் அடையாளத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவுக்கு வெளியே செய்யப்படும் பணப்பறிமாற்றத்துக்கு க்யூஆர் கோடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 26-ம் தேதி நாடு முழுவதும் பரவலாக யு.பி.ஐ. சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல், ஏப்.2-ம் தேதியும் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து