முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-2 2024-04-15

Source: provided

சென்னை : மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று (15.04.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் சார்பில் மூன்றாம் கட்டமாக புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை வெளியிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறையானது தொன்மை வாய்ந்த திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், திருக்கோவில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், சமய நெறிகளை பரப்பிடும் வகையில் அரிய ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்திடும் பணிகளையும், அவை அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் திருக்கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களையும் அமைத்து செயலாற்றி வருகிறது. 

அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு தொடங்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட அரிய 108 ஆன்மிக நூல்கள் 19.01.2023 அன்றும், 2-ம் கட்டமாக தலவரலாறு, தலப்புராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 108 ஆன்மிக நூல்கள் 27.02.2024 அன்றும் வெளியிடப்பட்டன.

இந்நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் ஆணையர் அலுவலகம் மற்றும் 203 திருக்கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2024 -2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடத்தப்படும் பதிப்பகப்பிரிவின் மூலம் சமயம் சார்ந்த தொன்மையான மற்றும் அரிய 300 ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பதிப்பகப் பிரிவின் மூலம் மூன்றாம் கட்டமாக, திருப்பேரூர் புராணம், பாவநாசத் தலபுராணம் போன்ற தலபுராண நூல்கள், சிவபுராணம், கந்தபுராணம் போன்ற புராணக்கதை நூல்கள், வழிபாட்டு பாடல்கள், மகாபாரதம், கம்பராமாயணம் போன்ற இதிகாச நூல்கள், காரைக்கால் அம்மையார். நம்மாழ்வார் போன்ற அடியார் புலவர் வரலாற்று நூல்கள், நுண்கலைகள், ஓவியச் செந்நூல் போன்ற கோவில் கலை வரலாற்று நூல்கள், சைவ, வைணவ இலக்கியங்கள், வேலும் வில்லும், வள்ளி மணம் போன்ற ஆன்மிக ஆய்வு நூல்கள், Temples gifted with Devaram, How soul becomes light போன்ற ஆங்கில நூல்கள் என புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து