முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      விளையாட்டு
17-Ram-58

Source: provided

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி விளையாடி வருகிறார்.

இந்நிலையில், வான்கடே மைதானத்தின் திவேச்சா பெவிலியன் லெவல் 3 பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் பெயர் சூட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளருக்கு அபராதம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில்  நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில்  முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது.  அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து  சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான முனாப் படேலுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது. அவர் எந்த காரணத்திற்காக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை. இருப்பினும் களத்தில் உள்ள வீரர்களுக்கு தன்னுடைய ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் மற்றொரு வீரரை அனுப்ப நடுவர் மறுத்ததால் முனாப் படேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது. 

பந்துவீச்சு குறித்து ஸ்டார்க்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில்  நடைபெற்ற ஐ.பி.எல்.  32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில்  முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது.  அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து  சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.

கடைசி ஓவர் (20-வது ஓவர்) மற்றும் சூப்பர் ஓவரை அற்புதமாக வீசி டெல்லி அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியது குறித்து மிட்செல் ஸ்டார்க் பேசுகையில், "நான் என்னுடைய திறனை மட்டுமே நம்பி அந்த கடைசி ஓவரை வீசினேன். அதேபோன்று  எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனுக்கு பவுண்டரியை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்து யார்க்கர் பந்துகளாக வீசினேன். அதிர்ஷ்டமும் என் வசம் இருந்ததால் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று கூறினார். 

சூப்பர் ஓவர்: ராணா விளக்கம்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில்  நடைபெற்ற ஐ.பி.எல்.  32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில்  முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது.  அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து  சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.

சூப்பர் ஓவரில்  இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய நிதிஷ் ராணா,  " சூப்பர் ஓவரில் யாரை அனுப்ப வேண்டும் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல. ஹெட்மயர் மற்றும் பராக்கை அனுப்பியது நல்ல முடிவு தான். ஹெட்மயர் எங்கள் அணியின் ஃபினிஷர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என தெரிவித்தார். 

சந்தீப் மோசமான சாதனை

ஐ.பி.எல்.  தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் உடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி பேட் செய்தபோது கடைசி ஓவரை ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரில்  நான்கு ஒய்டு , ஒரு நோ-பால், நான்கு சிங்கிள், ஒரு  போர் மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 19 ரன்களை அந்த ஓவரில் கொடுத்திருந்தார். 

ராஜஸ்தான் தோல்விக்கு ஒரு காரணமாக சந்தீப் சர்மாவின் கடைசி ஓவர் அமைந்தது.  கடைசி ஓவரில் 19 ரன்கள் கொடுத்ததன் மூலம் மொத்தமாக 4 ஓவர்களில் 33 ரன்களை தாரை வார்த்தார். வழக்கமாக டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசும் திறன் கொண்டவர் சந்தீப் சர்மா. பந்தில் வேகத்தை குறைத்து வீசுவது வழக்கம். நேற்றைய தினம் பந்த சற்று அகலமாக வீச முயன்று தோல்விகண்டார்.

தோல்வி குறித்து சஞ்சு சாம்சன்

டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.  அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது: காயம் ஏற்பட்டதால் என்னால் பேட் செய்ய முடியவில்லை. இதனால் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை.  உண்மையில் நாங்கள் நன்றாகத்தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் பேட்டிங் செய்தோம். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தோம். ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம்.  டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்  என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து