முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்காளத்தில் வன்முறைக்கு பலியான குடும்பத்திற்கு நிவாரணம் : முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      இந்தியா
mamtha 2023-06-01

Source: provided

கொல்கத்தா : கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மத அடையாளங்களை நாங்கள் பார்க்கவில்லை. அவர்களுடைய வலியை பார்க்கிறோம் என தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, வன்முறைக்கு பலியானோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 11-ந்தேதி பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். வன்முறைக்கு மொத்தம் 3 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 220 பேர் கைது செய்யப்பட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முர்ஷிதாபாத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரும் அடங்குவர். போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், போலீஸ் வாகனங்கள் 5 தீ வைத்து கொளுத்தப்பட்டன. காவல் அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டன. சிறை வேன் ஒன்று சூறையாடப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் வன்முறைக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். அவர் கொல்கத்தா நகரின் நேதாஜி உள்ளரங்கத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, இதுபற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி தலைமை செயலாளரிடம் கேட்பேன். பாதிக்கப்பட்டவர்களின் மத அடையாளங்களை நாங்கள் பார்க்கவில்லை. அவர்களுடைய வலியை பார்க்கிறோம் என்றார். வீடுகளை இழந்தவர்களுக்கு, அரசு செலவிலான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும். சேதமடைந்த கடைகள் பற்றி தலைமை செயலாளர் மதிப்பீடு செய்வார். இதன்பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கான பணிகள் செய்து முடிக்கப்படும் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து