முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் மாநிலத்தில் 20000 மெகாவட் நீர்மின்சார உற்பத்தி செய்யலாம்-உமர் அப்துல்லா

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,மார்ச்.- 27 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 20 ஆயிரம் மெகாவட் நீர்மின்சாரம் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியும் என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெரும்பாலும் மலைப்பிரதேசமாகும். மேலும் மழைகாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கோடை காலத்தில் பனி உருகி தண்ணீராக ஓடும். அதனால் அந்த மாநிலத்தில் ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் முகமத்  ஷரீப் நியாஸ் கேள்விக்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, மாநிலத்தில் சுமார் 20 ஆயிரம் மெகாவட் நீர்மின்சார உற்பத்தி செய்யும் அளவுக்கு ஆதாரங்கள் உள்ளது. அதில் 16 ஆயிரம் மெகாவட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆதாரங்கள் இருக்கும் இடங்கள் அடையாளம் காணப்படும். 

மாநிலத்தில் பல்வேறு நீர்மின்சார உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 450 மெகாவட் பகலிஹர் இரண்டாவது நீர்மின்சார உற்பத்தி திட்டமும் சன்ஜாக் 1.26 மெகாவட் மினி நீர்மின்சார உற்பத்தி திட்டப்பணியும் நடந்து வருகிறது என்று முதல்வர் உமர் அப்துல்லா மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்