முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் மலைமேல் திருக்கார்த்திகை மகாதீபம் பக்தர்கள் தீபதரிசனம்

புதன்கிழமை, 28 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், நவ. - 28 - திருப்பரங்குன்றம் மலைமேல் நேற்று மாலை 6.15 மணீக்கு திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது. முருகப்பெருமானின் முதல்படைவீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 19 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினம் காலையில் தங்கமயில், தங்க சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவு தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், ரத்ன சிம்மாசனம், தங்கக் குதிரை ஆகிய வாகனங்களிலும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளி திருவீதி ்உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கார்த்திகை மகா தீபம் நேற்று மாலை 6.15 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் வின்ணை எட்ட மலைமேல் ஏற்றப்பட்டது. கார்த்திகை மகா தீபம்: நேற்று காலை கோயில் உ்ற்சவர் சன்னதியில் எழுந்தருளியுள்ள உற்சவர் முருகப்பெருமான், தெய்வானைக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சர்வ அலங்காரமாகி, 11 மணிக்குள் 16 கால் மண்டபத்தின்முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் எழுந்தருளினர். பகதர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. அதே சமயம் மலைமேல் தீப மண்டபம் அருகிலுள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு கும்பங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து, விநாயகர் பூஜை, அக்னிலிங்க பூஜை, வர்ணபூஜை உள்ளிட்ட பூஜைகள், தீபாராதனைகள் முடிந்து, தீப கொப்பறையில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள் பாலதீபம் ஏற்றப்பட்டது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர் துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது. .கோயில் மணி அடிக்கப்பட்டது. அப்போது மலைமேல் 6.15 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். திருப்பரங்குன்றமே ஜோதி வடிவாக காட்சியளித்தது. கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்பு மூன்று முறை பாலதீபம் ஆரத்தி முடிந்து, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு சொக்கப்பான் தீபக் காட்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மலைமேல் செல்ல தடை: கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலைமேல் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் மலைமேல், சில நாட்களுக்கு முன்பு வெடிக்கவிருந்த மொபைல் வெடிகுண்டு, வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வெடி பொருட்கள் குவியல் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. அதனால் கார்த்திகை திருவிழாவிற்காக எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் தலையில், 5 டி.எஸ்.பி.க்கள், 5 இன்ஸ்பெக்டர்கள், 25 எஸ்.ஐ.க்கள், 300 போலீசார் மற்றும் மப்டி போலீசாரும் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈ்டுபட்டிந்தனர். மலைமேல் காசிவிஸ்வநாதர் கோயில், புதிய படிக்கட்டுகள், நெல்லித்தோப்பு, தர்ஹா, பெரியரத வீதி, பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள பள்ளிவாசல்களில் போலீஸ் போடப்பட்டிருந்தது. மலைமீதுள்ள தீபத்தூண், தீப மண்டபத்திற்கு துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ்ஈடுபடுத்தப்பட்டனர், தீபத் தூணில் இருந்து பைனாக்குலர் மூலம் போலீசார் கண்காணித்தனர். வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயல் இழப்பு குழுவினரும் சோதனையில் ்ஈடுபட்டனர். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று சுவாமி தீர்த்த உற்வசம் நடக்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்