முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மீது அவமதிப்பு வழக்கு: தமிழகம் தொடர்ந்தது

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - காவிரியில் குறைவாக தண்ணீர் திறப்பு விஷயமாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு அவமதித்து விட்டதாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற மத்திய நிபுணர் குழுவினர் பரிந்துரையின் பேரில் கர்நாடகம் உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 7​ந் தேதி உத்தரவிட்டது.

அதன்படி கிருஷ்ணா ராஜசாகர் அணையில் இருந்து கடந்த 9​ந் தேதி வினாடிக்கு 1, 250 கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டது.   வழக்கமாக கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது 48 மணி நேரத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும். ஆனால் நேற்றுடன் 5 நாட்கள் ஆகியும் இன்னும் பிலிகுண்டுலுவுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு அவமதித்து விட்டதாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:​

காவிரி டெல்டா விவசாயிகளின் அவசர தேவைக்காக கர்நாடக அரசு உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இந்த உத்தரவை மதிக்கவில்லை.

கிருஷ்ணாராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி திறக்கப்பட்டதாக கர்நாடக முதல்அமைச்சர்  ஷெட்டர் கூறியிருந்தார். ஆனால் 127 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதே அளவில் தண்ணீர் வந்தால் 2.44 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணை வந்துசேர 240 நாட்கள் ஆகும். இது கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே, கோர்ட்டு உத்தரவுபடி தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையான அளவு தண்ணீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக முதல் அமைச்சர் ஷெட்டர், மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட 5 பேர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்