முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து தீவிரவாதம் கருத்து: ஷிண்டே மன்னிப்பு கேட்கவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 25 - இந்து தீவிரவாதம் பற்றிய தனது கருத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வருத்தம்தான் தெரிவித்தாரே தவிர, அவர் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கவில்லை என்று மத்திய அமைச்சர் கமல்நாத் விளக்கம் அளித்துள்ளார். 

இந்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சி முகாம்களை நடத்தி வருகிறது என்று ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மேலிட கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருத்து தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மறுநாளே மத்திய அமைச்சர் ஷிண்டே, தான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது வருத்தமா? அல்லது மன்னிப்பு கேட்டாரா? என்பதிலும் சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.அப்போது அவரிடம், ஷிண்டே தான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவித்தாரா? அல்லது மன்னிப்பு கேட்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல்நாத் அவர் வருத்தம்தான் தெரிவித்தார். மன்னிப்பு கேட்கவில்லை. அவர் தெரிவித்த வருத்தத்தை பாரதீய ஜனதாவும் ஏற்றுக் கொண்டு விட்டது என்று விளக்கம் அளித்தார்.  மேலும் அவர் கூறுகையில், 

அவர் எந்த ஒரு அரசியல் அமைப்பையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அவர் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. இருந்தாலும் அவர் வருத்தம் தெரிவித்தார் என்று கமல்நாத் விளக்கினார். இதே போல உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போதும் ஒரு கருத்தை கூறியிருந்தார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். ஷிண்டே கூறுகையில் பாரதீய ஜனதா என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டார். ஆனால் சிதம்பரம் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. அவ்வளவுதான் என்று கமல்நாத் மேலும் விளக்கினார். 

எனவே இந்த பிரச்சினையை இழுக்க வேண்டாம். கமா, புல்ஸ்டாப் போடுவதற்கு இது ஒன்றும் பரிட்சை அல்ல என்றும் கமல்நாத் கோபத்துடன் கூறினார். மேலும் ஷிண்டே விவகாரத்தை பாரதீய ஜனதா தலைவர்கள் ஆலோசித்து விட்டார்கள். எனவே இனிமேல் சிக்கல் வராது என்றும் கமல்நாத் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்