முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்தவாரம் ஆப்கான் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே.- 9  - அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதையொட்டி ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பிரதமர் மன்மோகன் சிங் அடுத்தவாரம் ஆப்கானிஸ்தானுக்கு செல்லலாம் என்று தெரிகிறது.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயிக்கும் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா ரூ. 5 ஆயிரத்து 400 கோடி நிதியுதவி செய்துள்ளது. தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் உள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோதிலும் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறாது என்று கூறப்படுகிறது. கடந்த 1980-ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் இருந்த ரஷ்ய படைகளை அமெரிக்கா வெளியேற்றியது. ரஷ்ய படைகள் வெளியேறியவுடன் அமெரிக்க படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இதனால் ஆப்கானிஸ்தானில் குழப்ப நிலை ஏற்பட்டது. 1980-ம் ஆண்டுகளில் செய்த தவறை அமெரிக்கா மீண்டும் வெளியேறாது. பின்லேடன் கொல்லப்பட்டதால் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பு கருதி பிரதமர் மன்மோகன் சிங் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தவார ஆரம்பத்தில் செல்லலாம் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் பிரதமரின் வருகையை எதிர்நோக்கி இருக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்,  ஆப்கானிஸ்தானுக்கு செல்லும்போது அவருடன் பாதுகாவலர்கள், அதிகாரிகள் என 20 பேர் உடன் செல்வார்கள் என்று தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்