முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 17- சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி 2004-ம் ஆண்டில் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ்டுபட்டனர்.

2006-ம் ஆண்டு தமிழை வழக்காடு மொழியாக பரிசீலிக்க அப்போது தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முடிவு செய்தார். ஆனால் இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஐகோர்ட் வக்கீல்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ்டுபட்டனர்.

இந்த நிலையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி முருகன், கயல்விழி, பகத்சிங் ஆகிய 3 வக்கீல்கள் இன்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

ஐகோர்ட்டில் உள்ள வக்கீல்கள் சங்கம் முன்பு அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கோரிக்கையை நிறைவேற்றும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வோம் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்