எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.31 - குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (சி.எப்எல்) வழங்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதாநேற்று தொடங்கிவைத்தார்
புதுப்பிக்கத் தக்க மற்றும் மாசற்ற எரிசக்தியினை ஊக்குவித்து அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை முதல்_அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மொத்தத்தில் 519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை முதல்_ அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மின் விநியோகத்தை துவக்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:_
முதல்வர் ஜெயலலிதா நேற்று (30.12.2013) கோடநாடு முகாம் அலுவலகத்தில், மதுரை மாநகர், மகாத்மா காந்தி நகரில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி (யடுக்ஷடீச் இச்டூக்டீஙுடீடூஷடுடூகி) மூலமாகத் திறந்து வைத்தார்கள். மேலும், 505 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துணை மின் நிலையங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சரியசக்தி மின் உற்பத்தி அமைப்பு ஆகியவற்றை திறந்து வைத்து, குடிசை மின் நுகர்வோர்களுக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (இஊக) வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின்சக்தி இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுகின்ற உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்து, சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது இன்றியமையாததாகும் என்பதை கருத்தில் கொண்டு புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 25.4.2013 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், மதுரை மாநகர், மகாத்மா காந்தி நகரில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகவும்;
505 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2 எண்ணிக்கையிலான 230 கி.வோ. துணை மின் நிலையங்கள், 29 எண்ணிக்கையிலான 110 கி.வோ. துணை மின் நிலையங்கள், 18 எண்ணிக்கையிலான 33 கி.வோ. துணை மின் நிலையங்கள்; என மொத்தம் 509 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
சரிய ஒளியானது, மனித குலத்திற்கு தூய்மையானதும், சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாததும், அளப்பரியதும் மற்றும் குறைவற்றதுமான எரிசக்தி ஆதாரம் கொண்டதாகும். சரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு சரிய சக்திக் கொள்கை_2012 அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக சரியசக்தியிலிருந்து மின் உற்பத்திப் பெருக்கத்திற்கு ஒரு புதிய பாதை வகுத்துள்ளார்.
அதன்படி, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற எரிசக்தியினை ஊக்குவித்து அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சரியசக்தி மின் உற்பத்தி மூலம், வருடத்திற்கு சுமார் 1 லட்சம் மின் யூனிட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். மேலும், இந்த சரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தில் பெறப்படும் மின்சாரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தின் தினசரி மின் தேவையின் ஒரு பகுதியினை ஈடுசெய்ய பயன்படுவதோடு விடுமுறை தினங்களில் உற்பத்தியாகும் உபரி மின்சாரம் மின் கட்டமைப்பு தொகுப்புடன் இணைக்கப்படும்.
பொது மக்களிடையே மின் சேமிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், திறன்மிக்க மின்விளக்குகளின் சந்தை விலையைக் கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்களும் இத்தகைய மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழகத்தில் உள்ள சுமார் 14 லட்சத்து 62 ஆயிரம் குடிசை மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு விலையில்லா திறன்மிக்க சிறுகுழல் விளக்குகளை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, முதற்கட்டமாக 7 லட்சம் குடிசை மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு விலையில்லா 9 வாட் சிறு குழல் விளக்குகளை வழங்குவதன் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா திறன் மிக்க சிறுகுழல் விளக்குகளை வழங்கினார். இந்த திட்டத்தின் பயனாக மட்டுமே சுமார் 40 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க இயலும்.
மொத்தத்தில் 519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, மின் விநியோகத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்,மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறைச் செயலாளர்
ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஞானதேசிகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
சோமாலியாவை சேர்ந்த 24 பேர் கடலில் மூழ்கி பலி
25 Nov 2024மொகதிசு, கடலில் படகுகள் மூழ்கி விபத்தில் சோமாலியாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
கடலூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு: பொதுமக்களின் நண்பர்களாக காவலர்கள் செயல்பட வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
25 Nov 2024கடலூர், கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்பு மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை
25 Nov 2024நாமக்கல் : ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி’ என்ற பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் அழித்தார்.