முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை ஜூன்-1  - நெல்லை வழியாக கேராளவுக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர். பெங்களுருவிலிருந்து நெல்லை வழியாக கேரளாவுக்கு எரிசாரயம் கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திரபிதரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து கடத்தல் லாரியை பிடிக்க இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சாகுல் ஹமீது, சிவசுப்பு , மற்றும் போலீசார்அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படை போலீசார் நேற்று நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஆரைக்குளம் பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்றை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் 35 லிட்டர்கொள்ளளவு கொண்ட 188 கேன்களில் எரிசாராயம் இருப்பதுகண்டுப்பிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து லாரி டிரைவர் மேலப்பாளையம் சிவராஜபுரத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் வேலு(எ)நடராஜன்(34), கிளினர் சிவராஜபுரத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் முத்துக்கிருஷ்ணன்(29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் லாரியிலிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலானஎரிசாராயமும், ரூ.10லட்சம் மதிப்பிலான லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட லாரி டிரைவர் மற்றும் கிளினரிடம் நடத்திய விசாரணையில் எரிசாரயம் பெங்களுருவில் இருந்து கேரளமாநிலத்திற்கு கடத்தப்படுவது தெரியவந்தது. இந்த கடத்தலில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்