முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிறந்த தினத்தை விவசாயிகள் உரிமை தினமாக கொண்டாட முடிவு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,ஜூன்.18 - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி பிறந்த தினத்தை உத்திரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் உரிமைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்யெலாளருமான ராகுல் காந்திக்கு நாளை பிறந்த தினமாகும். அவரது பிறந்த தினத்தை விவசாயிகள் உரிமை தினமாக கொண்டாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தை நடத்தும்படியும் காங்கிரசார் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் காங்கிரசுக்கு ஆதரவை பெருக்கும் வகையில் இந்த முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது. மாநிலத்தில் உள்ள 4 ஆயிரம் பஞ்சாயத்துக்களிலும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்து விவசாயிகளுடன் விரிவான முறையில் விசாரணை நடத்தப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விவசாயிகளிடம் குறைகளை கட்சி தலைவர்கள் கேட்டறிவார்கள். விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளையும் காங்கிரசார் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சி செய்வார்கள். ஏற்கனவே விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக டெல்லி அருகே உள்ள கிரேட் நொய்டாவில் காங்கிரஸ் கூட்டம் கூட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்