முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மே.இ.தீவு 173 ரன்னில் சுருண்டது இஷாந்த், பிரவீன்குமார் அபாரம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

கிங்ஸ்டன், ஜூன், - 23  - இந்திய அணிக்கு எதிராக கிங்ஸ்டனில் நடந்து வரும் முதலாவது கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 173 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில், வேகப் பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா மற்றும் பிரவீன் குமார் இருவரும் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டைக் கைப்பற்றினார்கள். அமித் மிஸ்ரா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினார்கள். மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜமைக்கா தீவில், கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க்கில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன்னை எடுத்த து. ரெய்னா 82 ரன்னையும், ஹர்பஜன் சிங் 70 ரன்னையும், டிராவிட் 40 ரன்னையும் எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 67.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 173 ரன்னில் சுருண்டது. அந்த அணி சார் பில் ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர்.
துவக்க வீரர் பரத் அதிகபட்சமாக, 122 பந்தில் 64 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பிரவீன் குமார் வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலிய ன் திரும்பினார். பரத்தும், பிராவோவும் இணைந்து 3 -வது விக்கெட்டிற்கு 51 ரன் சேர்த்தனர்.
அடுத்தபடியாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பாக் 35 பந்தில் 27 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவி ர, சந்தர்பால் 74 பந்தில் 23 ரன்னையும், பிராவோ 18 ரன்னையும், ராம் பால் 14 ரன்னையும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில், இளம் வேகப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர் மா 29 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 38 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, அமித் மிஸ்ரா மற்று ம் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
மே.இ.தீவு அணியின் ஸ்கோர் 18 - ல் சிம்மன்ஸ் ஆட்டம் இழந்தார். பின்பு 35 - ல் சர்வானும், 91 -ல் பரத்தும் அவுட்டானார்கள். அதன் பின் பு விக்கெட்டுகள் சிறிது இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன.
அடுத்து 2 -வது இன்னிங்சைத் துவக்கிய இந்திய அணி 2 -வது நாள் ஆட்ட நேர முடிவில், 41 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 91 ரன் எடுத்து இருந்தது. அப்போது, டிராவிட் 45 ரன்னுடனும், கோக்லி 14 ரன்னுட னும் களத்தில் இருந்தனர். முகுந்த் 25 ரன்னில் அவுட்டானார்.
துவக்க வீரராக இறங்கிய விஜய் பூஜ்யத்தில் ஆட்டம் இழந்தார். பின்பு களம் இறங்கிய லக்ஷ்மணும் கணக்கைத் துவக்காமலேயே வெளியேறி னார். மே.இ.தீவு அணி தரப்பில், ராம்பால், சம்மி மற்றும் பிஷு ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்