முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

திருவண்ணாமலை,ஜூலை.- 4 - தமிழகத்தில் கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு கோடியே 40 லட்சம் குடும்பத்தினரும் நிம்மதி அடையும் வகையில் அரசு கேபிள் டி.வி. குறித்து அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தமிழக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.  தமிழக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் அதன் மாநில தலைவர் கரூர் ஆறுமுக்ம் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் கடந்த 22 ம் தேதியன்று தமிழக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக சங்க நிர்வாகிகள் முதல்வரை சந்தித்த போது பரிந்துரைப்பதாக அறிவித்த முதல்வருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். முதல்வரின் இந்த அறிவிப்பினால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 2 கோடியே 40 லட்சம் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். கட்டண சேவைகளின் விநியோக உரிமை அனைத்தையும் அரசே ஏற்று ஏற்கனவே தொழில் செய்து வரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையில் சிக்னல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
கடைக்கோடியில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டரின் நலனும் பாதிக்காமல் அரசு கேபிள் கார்பரேசன் சீரமைக்கப்படும் என்று உறுதியளித்த முதல்வருக்கு ஏகமனதாக நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்