முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

கோவை,ஜூலை,- 31 - தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தாசநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சித்தவைத்தியர் மோகன்ராஜ். இவருக்கு சொந்தமான 20 ஆயிரத்து 416 சதுர அடி கொண்ட நிலம் சேலம் நிலவாரப்பட்டியில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடியாகும். கடந்த 2008-ம் ஆண்டு ரூ.40 லட்சம் கொடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கெளசீக பூபதி பெயரில் பவர் வாங்கி நிலத்தை அபகரித்துக்கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்றுக்காலை சேலம் காவல் நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். இந்திய தண்டனை சட்டம் 147, 447, 506 (1), 386 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்தனர். பின்பு அவர் 4-வது ஜூடிஷியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்தமாதம் 12-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா உத்தரவிட்டார். இதனையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் நேற்றுக்காலை 11.35 மணிக்கு கோவை மத்திய சிறைக்கு வேன் மூலம் கொண்டுவரப்பட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்