முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.28  - தி.மு.க.ஆட்சியின் கமிஷன் திட்டங்களாக இருந்த வற்றையொல்லாம் மக்கள் திட்டங்களாக மாற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு  பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.  நேற்று முன்தினம்பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:- முதன்மை மாநிலமாக தமிழகத்தை காக்க முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முயற்சியின் வடிவமாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையும் சேர்ந்துள்ளதற்கு நன்றி. பழவேற்காடு முதல் புதுச்சேரி வரை பக்கிங்காம் கால்வாயை சீரமைக்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதை கடலூர் பரங்கிபேட்டை வரை நீடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

அதேபோல் அத்திகடவு அவினாசி திட்டம் அறிவித்ததற்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். சென்னை நகர குடிநீர் பிரச்சனை தீர்க்க திட்டமிடுவதையும் நதிநீர் இணைப்பு திட்டத்தையும் பாராட்டுகிறோம். கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியமைப்பதற்காக மாற்றியதாக சொல்கிறார்கள். ஊழல் செய்வதில் தமிழகம் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே முதல் இடத்திற்கு மாற்றிவிட்டார்கள்.

தமிழக சிறைச்சாலைகள் நிறைந்து, திஹார் சிறை நிறைந்து, புதிய சிறைச்சாலைகள் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுளஅளது. தி.மு.க.வினருக்கு கொள்ளை களமாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைந்தது. தி.மு.க. ஆட்சி என்றால் கமிஷன் ஆட்சி என்ற நிலைதான் அன்று இருந்தது. நால்வழி நாற்கர சாலைகளை அகலப்படுத்தும்போது சாலை ஓர புளியமரங்களை வெட்டி விற்று பெரும் கொள்ளை அடித்துள்ளனர். 40 முதல் 50 சதவிகிதம் வரை திட்டத்தின் மொத்த தொகையில் கமிஷன் பெற்றுள்ளனர். திட்டங்கள் மக்களுக்காக என்ற நிலையை மாற்றி கமிஷனுக்காக திட்டங்கள் என்ற நிலை இருநத்து. அதைமாற்றி ஜெயலலிதா அரசு மக்களுக்கு திட்டங்கள் தீட்டியதை பாராட்டுகிறோம்.

புதிய தலைமை செயலகத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க உத்தேசித்துள்ளதை வரவேற்கிறோம். அதே வேலையில் அந்த வளாகத்தில் உள்ளே இருந்த  கலைவானர் அரங்கம் இடிக்கப்பட்டுவிட்டது. அரசு சார்பு விழாக்கள் நடந்து வந்தது.  கலைவானர் மீது கருணாநிதிக்கு என்ன கோபமோ தெரியவில்லை. அதை இடித்துவிட்டார். அதை மீண்டும் கட்டிதர வேண்டும். அதேபோல் பழைய சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் தங்குவதற்கு வசதியாக விடுதி இருந்தது. அதையும் இடித்துவிட்டார்கள். அதையும் கட்டிதர வேண்டும். அதேபோல் சிங்காரவேலருக்கு மணிமண்டபமம் அமைத்திட வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவரி கொள்ளை நடைபெற்று வருகிறது. 1 பஸ்ஸூக்கு ரூ.30 முதல் 40 வரை கொள்ளை நடைபெற்று வருகிறது. மத்திய அரசிடம் பேசி குறைகளை களைய வேண்டும். பத்திரிகையாளர்கள் 4 முறை 5 முறை போகும்போதும், வரும்போதும் ஒவ்வொரு முறையும் வரிசெலுத்த வேண்டியுள்ளது. 

அமைச்சர் செந்தில்பாலாஜி: தேசிய நெடுஞ்சாலை சுங்கவரிகள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் வருகிறது. 

பாலகிருஷ்ணன்: மத்திய அரசின் கீழ் வந்தாலும் தமிழக அரசு சிறப்பு பாஸ் வழங்கி பிரச்சனையை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.

அதேபோல் தனியார் குவாரிகளில் மணல் கொள்ளையை தடுத்து பலகோடி ரூபாய் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். இந்த பிரச்சனை தீர கட்டுமான கழகத்தை அரசு உருவாக்க வேண்டும். நீர்பற்றாக்குறை மாநிலமாக இருந்தாலும் நீர் இலக்கு நிர்ணயித்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். நிலத்தடி நீர்குறையும் ஆபத்தான நிலையுள்ளது. அதை மாற்ற மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது பாராட்டத்தக்கது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்