முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பிரச்சினை: சோனியாவை சந்திக்க முடிவு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், நவ.15 - தனித் தெலுங்கானா மாநில பிரச்சினையில் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் என்ற பிரதமரின் பேச்சையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட தெலுங்கானா பகுதி எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி பல ஆண்டுகளாக அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஐதராபாத் கரீம் நகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அறிவித்தார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பரிந்துரைகளை அளித்தது. 

இப்பிரச்சினைக்கு ஜூன் மாதத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று கட்சி தலைமைக்கு தெலுங்கானா பகுதி எம்.பிக்கள் கெடு விதித்தனர். ஆனால் தீர்வு எட்டப்படாததால் அவர்கள் ராஜினாமா செய்தனர். போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பிரதமரும் இப்பிரச்சினையில் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது என்றார். பிரதமரின் இந்த கருத்து தெலுங்கானா மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மது யாக்ஷி கவுட் கூறினார். 

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை இது மீறுவதாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இப்பிரச்சினையில் கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியைத்தான் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் நம்பியிருக்கிறார்கள். விரைவில் சோனியாவை சந்தித்து இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்த உள்ளோம் என்றார் மது யாக்ஷி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்