முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி.ஊழலில் சிதம்பரத்திற்கு தொடர்பு? விசாரிக்கபா.ஜ.க. வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 11 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்திற்கு தொடர்பு இல்லை என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அப்போதைய நிதி அமைச்சரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியம்சாமி கூறிவருகிறார். இது தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்திய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, சுப்பிரமணிய சாமியின் கோரிக்கைப்படி சிதம்பரத்திற்கு தொடர்பு இருக்கிறதா? என்பதற்கான சாட்சியங்களை விசாரிக்க அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த நிலையில் பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்திருக்கிறார். அதனால் இந்த 2 ஜி. முறைகேட்டில் சிதம்பரத்திற்கு உள்ள பங்கு குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை என்று பிரசாத் கூறினார். 2 ஜி. முறைகேட்டிற்கும் சிதம்பரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு கூறிவருகிறதே என்று கேட்டதற்கு, சிதம்பரத்திற்காக முன்பு பிரணாப் முகர்ஜி வாதாடினார். இப்போது கபில்சிபலும் சிதம்பரத்திற்காக பேசிவருகிறார் என்று ரவிசங்கர்பிரசாத் கூறினார். சிதம்பரத்தை பாதுகாப்பதில் கபில்சிபலுக்கு திடீரென என்ன தேவை இருக்கிறது. சிக்கலில் இருக்கும் சிதம்பரத்தை சாந்தப்படுத்துவதற்காகவே இதுபோன்ற அறிக்கையை கபில்சிபல் வெளியிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை கண்ணியமாகவும், வெளிப்படையாகவும், செய்வதற்கான நடவடிக்கைகள் எதையும் சிதம்பரம் செய்யவில்லை என்றும் பிரசாத் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்