முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் ஹசாரேவுக்கு எதிராக கறுப்புக்கொடி

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

மும்பை,டிச.28 - மும்பையில் அண்ணாஹசாரேவுக்கு எதிராக ஒரு கும்பல் கறுப்புக்கொடி காட்டியது. அவருக்கு எதிராக கோஷமும் போட்டனர். பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நேற்று மும்பையில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவர் உண்ணாவிரத்தை தொடங்குவதற்கு முன்பு ஜூஹூ செளபாத்தியில் உள்ள மகாத்மா சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக காரில் சென்றார். பந்த்ராவில் உள்ள சிக்னலுக்கு ஹசாரே கார் வந்ததும் அங்கு கூடியிருந்த ஒரு கும்பல் தேசிய கொடியையும் கறுப்புக்கொடியையும் ஏந்தி ஹசாரேயின் காரை வழிமறித்து அவருக்கு காட்டினர். மேலும் அவருக்கு எதிராகவும் கோஷம் போட்டனர். இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் அரசியல் சட்டத்தை மீறியும் ஹசாரே செயல்பட்டுக்கொண்டியிருக்கிறார். அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும். லோக்பால் வரம்பிற்குள் கம்பெனிகள் துறையை ஏன் கொண்டு வரக்கூடாது என்று கோஷம் போட்டனர். உடனே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து கறுப்புக்கொடி காட்டியவர்களை கலைந்து செல்லும்படி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்