முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கள்யான் 80 % பயணத்தை முடித்துவிட்டது: இஸ்ரோ

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை.23 - செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் 80 சதவீத பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. வரும் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 80 சதவீத பயணத்தை அந்த விண்கலம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இத்தகவலை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம் நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இதேபோல் ஆகஸ்டிலும் ஒரு நிகழ்விற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் செப்டம்பரில் செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கள்யான் செலுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்