முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை.,,யில் எம்.இ., எம்.டெக்.கான கலந்தாய்வு

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.24 - அண்ணாபல்கலைக்கழகத்தில் எம்.இ., எம்.டெக். படிப்பில் சேர கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.பிளாண், எம்.ஆர்க். ஆகிய படிப்புகளில் சேர கேட், டான்செட் ஆகிய நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணாபல்கலைக்கழகம் தொடங்கியது. நேற்று முன்தினம் கேட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. 1,186 இடங்களுக்கு 1020 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

நேற்று (சனிக்கிழமை) முதல் கேட் தேர்வு அல்லாது டான்சட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.இந்த கலந்தாய்வு 27-ந்தேதி முடிவடைகிறது.இதில் 19ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் 14 ஆயிரம் பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலந்தாய்வு மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தலைமையில் நடை பெற்று வருகிறது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்