முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் பணியாளர் தலை துண்டித்து கொலை

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ரூட், செப்.15 - கடந்த ஆண்டு சிரியாவில் ஐ.எஸ். கடத்திய பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டது.
முன்னதாக இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதாகக் கூறிய பிரிட்டன் அரசு, இப்போது வீடியோ உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.எஸ்.-இன் இந்தக் கொடுஞ்செயலை "முழுமுற்றான தீமையின் செயல்" என்று சாடியுள்ளார். மேலும் "இந்த கொடூரக் கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்த எங்கள் அதிகாரத்தினால் இயன்றவை அனைத்தும் செய்யப்படும். இதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை" என்று கூறியுள்ளார்.
தலைத் துண்டிக்கப்பட்ட ஹெய்ன்ஸின் குடும்பத்திற்கு அரசு தன்னால் ஆன உதவிகளையும் ஆதரவுகளையும் அளிக்கும் என்று பிரிட்டன் வெளியுறவுச் செயலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பத்திரிகையாளர்களான ஜேம்ஸ் ஃபோலி மற்றும் ஸ்டீவன் சோல்டாஃப் ஆகியோரின் தலைகளைத் துண்டித்த ஐ.எஸ். இதன் வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டது.
மேலும் குர்திஷ் மற்றும் லெபனான் ராணுவ வீரர்கள் தலையைத் துண்டித்த வீடியோக்களையும், சிரிய ராணுவ வீரர்களைக் கொன்று குவித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்