முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ஏற்றம்.

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- பாம்பன் கடலோரப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய அலை அடித்து வருவதால் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 நேற்று  ஏற்றப்பட்டது.
 வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.இதனால் சென்னை கடலோரப்பகுதியில் கிழக்கு, தென்கிழக்கு திசையில் ஆழ்கடலில் 1150 கி.மீ வோகத்திலும்,ஆந்திரா மாநிலம் மச்சிலப் பட்டிணம் கடலோரப்பகுதியில் கிழக்கு,தென்கிழக்கு திசையில் ஆழ்கடலில் 1330 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசி வருகிறது.இதனால் இந்த கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.இதனால் இந்த மண்டலம் ஆந்திரா கடலோரப்பகுதியில் புயலாக  மாறி மையம் கொண்டுள்ளது.இதனை தொடர்ந்து பாம்பன் பாக்ஜலசந்தி கடலோரப்பகுதியில் ஆழ் கடலில் பலத்து சூறாவளி காற்று வீசி வருகிறது.ஆதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பாம்பன் கடலோரப்பகுதியில் மீன்பிடிக்கும் செல்லும் மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் கடந்த நான்கு நாட்களாக புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆந்திரா கடலோரப்பகுதியில் புயல் கரையை கடந்து வருவதால் தமிழக கடலோரப்பகுதியில்  காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பாம்பன் துறை முகத்தில் நான்கு நாட்களாக ஏற்றப்பட்டிருந்த1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று மாலையில்  இறக்கப்பட்டது.பின்னர் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ஏற்றப்பட்டது.  கரையோரப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மீன் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து