முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

ஒட்டாவா, கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் கடந்த மாதம் 25-ம் தேதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இதன் மூலம் கனடா நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பை பெற்று கனடா அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். தலையில் டர்பன் அணிந்து நாடாளுமன்றத்திற்குள் ஜக்மீத் சிங் நுழைந்த போது, அவை உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து