முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து மே 23ல் முடிவெடுக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பங்கேற்பு...

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கூட்டணி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நேற்று விருந்து அளித்தார். இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கூட்டணி தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

நிர்வாகிகள் கூட்டத்தில்...

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல வந்தபோது சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடந்து முடிந்த தேர்தலில் அ தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்தியில் பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள அண்ணா தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். கருத்து கணிப்பை கருத்து திணிப்பு என கூறுவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருத்து திணிப்பு என கூறுவது அவரவர் மனநிலையை பொருத்தது என தெரிவித்தார். மேலும், தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறித்து கேட்டபோது, இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து