முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மூளை காய்ச்சல் விவகாரம்: மத்திய அமைச்சரிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : பீகாரில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் நோய் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து குழந்தைகளை தாக்கும் ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என இரு வகையான மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 130 குழந்தைகள் பலியாகியுள்ளன.  இவ்விவகாரத்தில் பீகார் மாநில அரசும், மத்திய அரசும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோரின் அலட்சியத்தால் தான் இத்தகைய பேரிழப்பு நிகழ்ந்ததாக கூறி முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தமன்னா ஹாசினி வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோரிடம் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து