முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து ஜெர்மனியில் பேரணி - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பெர்லின் : ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து ஜெர்மனியில் நடந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஜெர்மனி நாட்டில் பெண் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல் ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அனுமதிக்க கூடாது என்று உறுதியாக உள்ளார். ஆனால் அவரையும் மீறி அவருடைய கட்சியினர்களே ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவருடைய எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் அமலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஓரினச்சேர்க்கை திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியுள்ள நிலையில் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவது குறித்த வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக உள்ள வானவில்லின் நிறக் கொடியுடன் ஆடைகளை அணிந்தும் பல்வேறு விலங்குகள், பறவைகள் போன்று வேடமிட்டும் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர். தன்பாலின கொள்கைக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாலியல் ரீதியான குற்றங்கள் குறையும் என்று பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக வெளிப்படையான பேரணி நடந்து 50-வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்தப்படுவதாக அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து