முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட கலெக்டர் மேனன் நலமாக இருக்கிறார்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ராஞ்சி,ஏப்.27 - சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாக இருக்குறார். அவரது ஆஸ்துமா நோய்க்கு மருந்துகளும் சப்ளை செய்யப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்த மேனன் கடந்த வாரம் ஒரு கிராம நிகழ்ச்சியில் கலந்துகொண்டியிருந்தபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை மீட்க சத்தீஸ்கர் மாநிலத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கலெக்டர் ஆஸ்துமா நோயால் அவதிப்படுவதாகவும் அவருக்கு மருந்து பொருட்கள் தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்டது. இதனையொட்டி குழுவில் உள்ள சர்மா என்பவர் மூலம் மருந்து பொருட்கள் எடுத்துச்சென்று முன்னாள் வலது கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் பாஸ்தர் பகுதி மலைசாதியினர் தலைவருமான மணீஷ் குஞ்சமிடம் கொடுக்கப்பட்டது. அவர் மருந்துப்பொருட்களை பெற்றுக்கொண்டு கலெக்டர் மேனன் பூர்ண நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதாகவும் மணீஷ் தெரிவித்தார். மருந்துபொருட்களை மேனனிடம் கொடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். இந்த மருந்து பொருட்கள் அரசு சார்பாக கொடுக்கப்பட்டது. மேனன் குறித்தோ அல்லோது மாவோயிஸ்ட் தலைவர்களை சந்தித்தது குறித்து மணீஷ் விளக்கமாக கூற மறுத்துவிட்டார். நான் தூதுவராக செல்லவில்லை என்றும் மணீஷ் சுருக்கமாக கூறி முடித்துக்கொண்டார். மேலும் நேற்றுக்காலையில் மேனன் சொன்ன விஷயத்தை அவரது மனைவி ஆஷா மேனனிடமும் மணீஷ் கூறினார். காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டு திரும்புவதில் உங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டதற்கு காரணம் என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த மணீஷ் காட்டுப்பகுதிக்குள் பல கிராமங்களை கடந்து செல்ல வேண்டும். மேலும் அந்த பகுதி என் உறவினர்கள் வசிக்கும் பகுதியாகும். அவர்கள் நான் வருவதை கேட்டதும் மொத்தமாக என்னை பார்க்க கூடிவிட்டார்கள். 

அதனால் காலதாமதமாகிவிட்டது என்றார். இதற்கிடையில் மாவோயிஸ்ட்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்களின் பிரதிநிதிகள் பி.டி.சர்மா மற்றும் பேராசிரியர் ஜி. ஹர்கோபால் ஆகியோர் ஐதராபாத்தில் இருந்து ராய்ப்பூருக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். இவர்கள் மாநில அரசின் பிரதிநிதிகளுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால் எப்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்பது தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்