முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரயான் 98 சதவீத வெற்றி என்பது எனது கருத்தல்ல; குழுவின் கணிப்பு ஆகும் - சிவன்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : "சந்திரயான்-2" 98 சதவீத வெற்றி என்பது எனது கருத்தல்ல, குழுவின் கணிப்பு ஆகும் என இஸ்ரோ தலைவர்  சிவன் கூறி உள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவனிடம் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: விக்ரம் லேண்டர் சந்திரனில் இறங்கி கொண்டு இருந்தபோதே சந்திரயான் -2 க்கு 98% வெற்றி என்று ஏன் சொன்னீர்கள்?
பதில்: சந்திரயான் -2 க்கான ‘98 சதவீத வெற்றி விகிதம் ’என்பது எனது கணிப்பு அல்ல, இது குழுவின் ஆரம்ப மதிப்பீடாகும். பணியின் போது அடைந்த அனைத்து மைல்கற்களையும் பரிசீலித்தபின் அது அவ்வாறு கூறப்பட்டது.
சந்திரயான் -2 தொடங்கப்பட்டதிலிருந்து லேண்டரின் இறுதிவரை அனைத்தும் வெற்றிகரமாக இருந்தது. விக்ரம் தரை இறக்கம் கூட கடைசிவரை சரியாக இருந்தது. பெரும்பாலான பணி நோக்கங்கள் பூர்த்தி செய்யப்பட்டதால் குழு 98 சதவீத வெற்றி விகிதம் என கூறியது.
கேள்வி: இஸ்ரோ குழுவின் அறிக்கையின் கண்டுபிடிப்புகள் என்ன?
பதில்: செப்டம்பர் 7 ம் தேதி கட்டுப்பாட்டு அறை விக்ரமுடன் தொடர்பு இழந்ததற்கான காரணங்களை ஆராயும் குழுவில் கல்வியாளர்கள் மற்றும் இஸ்ரோ நிபுணர்கள் உள்ளனர். பிரதமர் எங்கள் துறைத் தலைவராக இருப்பதால் சில நாட்களில் அது தனது அறிக்கையை நேரடியாக பிரதமர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கும். அவரது ஆலோசனையைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் தீர்மானிப்போம்.
கேள்வி: ஆர்பிட்டர் எடுத்த படங்களை பொதுவெளியில் வைப்பீர்களா?
பதில்: ஒவ்வொரு படமும் பகுப்பாய்வு செய்யப்படும். இது மதிப்பாய்வு செய்வதற்கான சரியான செயல்முறையின் வழியாக செய்யப்படும். மதிப்பாய்வு மற்றும் ஒப்புதல்களுக்குப் பிறகு, படம் பொது களத்தில் வைக்கப்படும்.
கேள்வி: சுற்றுப்பாதையில் இருந்து பெறப்பட்ட எந்த படத்தையாவது நாசா அல்லது பிற விண்வெளி ஏஜென்சிகளுடன் பகிர்கிறீர்களா?
பதில்: அந்த படத்தை பகிர்வதில் சிக்கல் இருக்காது, ஆனால் அது எங்கள் கொள்கையின்படி இருக்க வேண்டும்.
கேள்வி : செப்டம்பர் 7 ஆம் தேதி ஆரம்பத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்து விட்டதாக நீங்கள் பிரதமருக்கு அறிவித்தபோது பிரதமர் மோடி உங்களிடம் என்ன சொன்னார்?
பதில்: அது ஒரு பதட்டமான தருணம், அவருடைய சொற்கள் எனக்கு சரியான நினைவில் இல்லை.அன்று காலையில், அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் உரையாற்றிய பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டதால் அவர் என்னைக் கட்டிப்பிடித்தார், ஆனால் பின்னர் அவர் எதுவும் சொல்லவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து