முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவின் வெற்றிப் பயணத்தை மும்பை நிறுத்துமா?

வெள்ளிக்கிழமை, 11 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, மே. 12 - ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவி ல் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. கொல்கத்தா அணியின் வெற்றிப் பய ணத்தை மும்பை அணி தடுத்து நிறுத்துமா? அந்த அணிக்கு ஈடுகொடுத்து ஆடுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது . 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 6 போட்டியில் வெற்றி வா கை சூடியுள்ளது. இதனால் அந்த அணி வீரர்கள் உற்சாகத்துடன் இன்றைய போட்டியில் களம் இறங்குகின்றனர். ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்று வரு ம் 9 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமான அணியாகும். இதி ல் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். ஆனால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு இன்னும் இழுபறியாக வே உள்ளது. 

5 -வது ஐ.பி.எல். போட்டி அரை இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட நிலையி ல், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் முதன் முறையாக இன்றைய ஆட்டத்தில் சந்திக்கின்றன. இதற்காக நாம் ஐ.பி.எல். அட்டவனைக்கு நன்றி சொல்வோம். 

கொல்கத்தா அணி தற்போதைய நிலை யில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணி இது வரை மொத்தம் 12 ஆட்டத்தில் ஆடி, 8 வெற்றியுடன் அரை இறுதி வாய்ப்பை பெற்று உள்ளது. 

கடந்த 10 ஆட்டத்தில் அந்த அணி 1 தோல்வி மட்டும் பெற்று உள்ளது. அந் த அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 3 சீசனில் அந்த அணி மோசமாக ஆடியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. 

மும்பை அணி சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் சாம்பியன் அணியாகும். இந்த ஐ.பி.எல். போட்டி துவங்குவத ற்கு முன்பாக மும்பை அணிக்கு பட்ட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. 

ஆனால் மும்பை அணியால் இந்த சீச னில் தொடர்ந்து சிறப்பாக ஆட முடிய வில்லை. அந்த அணி தடுமாறி வருகிற து. அந்த அணி இதுவரை மொத்தம் 12 ஆட்டத்தில் கலந்து கொண்டு 7 வெற்றி  பெற்று உள்ளது. மும்பை அணியின் பேட்டிங் இந்த சீசனில் சுமாராகவே உள்ளது. ஆனால் ஒரு சில போட்டிக ளில் மட்டும் நன்கு ஆடி வருகிறது. அந்த அணியின் பெளலிங் சிறப்பாக உள்ளது. முன்னணி வீரரான மலிங்கா கலக் கி வருகிறார். 

அதே போல கொல்கத்தா அணியின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. முக்கிய மாக சுழற் பந்து வீச்சாளர்கள் நன்கு பந்து வீசி வருகின்றனர். கேப்டன் காம்பீர் திறம்பட அணியை வழி நடத்தி வருகிறார். அவரது புத்தி சாதுர்யத்தினால் அந்த அணி வெற்றியை குவித்து வருகிறது. 

இந்த சீசனில் கேப்டன் காம்பீர் 5 அரை சதம் அடித்து இருக்கிறார். 3 முறை ஆட்டநாயகன் விருது பெற்று இருக்கிறார். அவர் நல்ல கேப்டனாகவும் மற்ற வீரர் களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்கிறார். 

சென்னை அணிக்கு எதிரான போட்டி யில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் கடைசி கட்டத்தில் 4 பந்தில் டெப்ரட்டா தாஸ் 11 ரன் அடித்தார். இதனால் தனக்கு வழங்க இருந்த ஆட்டமநாயக ன் விருதை காம்பீர் அவருக்கு அளித் தார். இது அவரது பெருந்தன்மைக்கு நல்ல எடுத்துக் காட்டாகும். இது அவ ருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்