முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் நடந்த விமானவிபத்து 11 இந்தியர்கள் உட்பட 15 பேர்பலி

திங்கட்கிழமை, 14 மே 2012      இந்தியா
Image Unavailable

காட்மாண்டு, மே  - 15 - நேபாள நாட்டில் ஜாம்சம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது 21 பேருடன் சென்ற ஒரு தனியார் விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 இந்தியர்கள் உட்பட தில் பயணம் செய்த 15 பயணிகள் உடல்கருகி பலியானார்கள். முன்னதாக இந்த விமானம் ஒரு மலை உச்சியில் மோதி கீழே விழுந்து தீப்பிடித்ததாக மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் 11 இந்தியர்களும், மற்றும் சில  நேபாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விமானத்தின் இடிபாடுகளில் இருந்து 9 உடல்கள் நேற்று மதியம் வரை மீட்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விமானம் நொறுங்கிக் கிடந்த பகுதியில் இருந்து 3 விமான ஊழியர்கள் மற்றும் 4 இந்தியர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் சொன்னார். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் பொகாரா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 இந்தியர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான தனியார் விமானம் ஜாம்சம் விமான நிலையத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது. வழியில் இது மலை உச்சியில் மோதியது. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மற்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் எந்தெந்த நாட்டு பயணிகள் பயணம் செய்தார்கள் என்பதில் குழப்பம் நீடிப்பதால் சரியான விவரங்கள் தெரியவில்லை. இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்