முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்றால் இந்தியருக்கு பாதிப்பு

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.  

ஒரு புதிய கொரோனா வைரசால் ஏற்படும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் நோய் பாதிப்பு மத்திய நகரமான வுஹானில் தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200இல் இந்த நகரம் முதலிடத்தில் இருப்பதாக அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தெற்கு சீனாவின் ஷென்சானில் சிலருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஷென்சான் நகரிலுள்ள பள்ளியொன்றில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த பீரித்தி மகேஸ்வரி எனும் ஆசிரியர், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்களன்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் வெளிநாட்டவரான பிரீத்திக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரசின் பாதிப்பு, தொற்று நோய் மற்றும் கடுமையான சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். இந்த கொரோனா வைரசின் பாதிப்பால் கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில், சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த 650 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து