முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேருக்கு நேர் எதையும் சந்திக்க தயாராக உள்ளோம் : பா.ஜ.க.வுக்கு மம்தா பானர்ஜி சவால்

ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : நேருக்கு நேர் எதையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று பா.ஜ.க.வுக்கு மம்தா சவால் விடுத்துள்ளார். 

மேற்குவங்கத்தில் 294 பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதியும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க. தீவிரமாக களமிறங்கியுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து சிலிகுரியில் நேற்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.  பின்னர் பேசிய அவர்; சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் மத்திய அரசில் தான் மாற்றம் நடக்கும்மேற்கு வங்கத்தில் இல்லை. மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறும் பிரதமர் உ.பி., பீகாரில் என்ன நிலை என பார்க்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள். சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் அவர்கள் சென்று வரலாம். காஸ் சிலிண்டர் விலையை ஏற்றி விட்டு, அதற்கு காரணம் சொல்லாமல், பெண்களை அவமதிக்கிறார்.

மத்திய அரசு அனைத்தையும் விற்று வருகிறது. ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல், ரயில்வே என அனைத்தையும் விற்று விட்டனர். மோடி வெற்று வாக்குறுதிகளை பிரதமர் அளித்து வருகிறார். மாநிலத்தை பிரிக்க  பா.ஜ.க. முயற்சி செய்கிறது. கொரோனா காலத்தில் மோடி, இங்கு வரவில்லை. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கூட்டம் நடத்தினார்.

மக்களிடம் இருந்து பா.ஜ.க. தான் கொள்ளையடித்து வருகிறது. ஓட்டை வாங்க பா.ஜ.க. முயன்றால், நீங்கள் பணத்தை வாங்கி கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். நாங்கள் விளையாட தயாராகி விட்டோம்; நேருக்கு நேர் எதையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து