முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் (0.9 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்யும். நாளை 15-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வரும் 16-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்கள், தமிழக வட உள் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியசாக இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வேடசந்தூரில் 5 செ.மீ. மழையும், குன்னூர், குடவாசல், கயத்தாறு ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து