முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதித்தவரின் தாயார் இறுதி சடங்கிற்கு டெல்லி போலீசார் உதவி

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய கொரோனா பாதித்த நபருடைய தாயாரின் இறுதி சடங்கிற்கு டெல்லி போலீசார் உதவி செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புகளுக்கு பலியாகி வருகின்றனர்.  இந்நிலையில், பொதுமக்களுக்கு நெருக்கடியான நேரத்தில் உதவும் வகையில் டெல்லி போலீசார் செயல்பட்டு உள்ளனர்.  

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ராகேஷ் கோச்சார் என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவரது தாயார் நிர்மலா கோச்சார் (வயது 90) கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்து உள்ளார்.  இதனையடுத்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டது.  கொரோனா பாதித்த ராகேஷால் தனது தாயாருக்கு இறுதி சடங்கு செய்ய முடியவில்லை.  இதனை தொடர்ந்து டெல்லி மாளவியா நகர் காவல் நிலைய போலீசார் அவரது உதவிக்கு வந்துள்ளனர்.  காவல் துறையினர் தங்களது கடமையுடன் கூடுதலாக இதுபோன்ற சேவையிலும் ஈடுபட்டது மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து