முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தை அர்ப்பணித்த கேப்டன் ' மன்பிரீத் '

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டியில் ஜெர்மனியை 5-4 என்று வீழ்த்திய இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது, இந்த வரலாற்று வெற்றி வெண்கலப்பதக்கத்தை கொரோனா போராளிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் அறிவித்தார்.

41 ஆண்டுகால...

1972 ஒலிம்பிக்கில் கடைசியாக வெண்கலம் வென்றது, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் கடைசியாக இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் வெண்கலம் வென்று 41 ஆண்டுகால பதக்கக் கனவை நிறைவேற்றியது.

பதக்கம் அர்பணிப்பு...

வெற்றி பதக்கம் சாதித்த இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் கூறும்போது, “இந்தப் பதக்கம் அனைத்து கொரோனா போராளிகள் மற்றும் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது” என்றார். 

கேப்டனுக்கு பாராட்டு...

இந்த நெகிழ்ச்சித் தருணத்தை நெகிழ்ச்சிமிக்க தருணமாக கோவிட் போராளிகள், முன்களப் பணியாளர்களை நினைவில் கொண்டு சமர்ப்பணம் செய்தமைக்காக இந்திய கேப்டன் மன்பிரீத் சிங்குக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

3-வது வெண்கல பதக்கம்...

இது இந்தியாவின் 3-வது ஒலிம்பிக் ஹாக்கி வெண்கலமாகும். 1968-ல் மெக்சிகோ நகரத்திலும் 1972-ல் மியூனிக் ஒலிம்பிக்கிலும் பெற்றது. இந்தியா தரப்பில் சிம்ரன் ஜித் சிங் (17, 34வது நிமிடம்), ஹர்திக் சிங் (27வது நிமிட பீல்ட் கோல்), ஹர்மன்பிரீத் சிங் (29வது), ருபீந்தர் பால் சிங் (31) என்று கோல்களை அடித்தனர். ஜெர்மனிக்கு தைமூர் ஓருஸ், நிகலஸ் வெலன், பெனடிக்ட் ஃபர்க், லூகாஸ் விண்ட் பெடர் ஆகியோர் கோல்களை அடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து