எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: ஐ.பி.எல் தொடரின் அடுத்த மூன்று சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
நான்கு வீரர்கள்...
ஐ.பி.எல் தொடரின் அடுத்த மூன்று சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. டோனியைத் தவிர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விதிகளின்படி, ஒவ்வொரு ஐ.பி.எல் அணியின் உரிமையாளரும், அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
மொயீன் அலி...
சென்னை அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியபடி ஐ.பி.எல் போட்டியின் அடுத்த சீசன் இந்தியாவில் விளையாடப்படும் என்பதால் மொயீன் அலி முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று சென்னை கருதுகிறது. மொயீன் குழுவில் வரவில்லை என்றால், இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் நான்காவது மற்றும் கடைசியாக தக்கவைக்கும் வீரராக இருப்பார்.
அடுத்த மாதம் ஏலம்...
ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பெயர்களை நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஐ.பி.எல் நிர்வாகக் குழு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், பிரித்வி ஷா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள உள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் விடுவிக்கப்பட்ட ஒரே காரணம், அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்த விரும்பினார், ஆனால் நிர்வாகம் ரிஷாப் பண்ட் கேப்டன் பதவியில் வைக்க விரும்புகிறது.
ரோகித் - பும்ரா...
மும்பை இந்தியன்ஸ் பொறுத்தவரை, அவர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தக்கவைக்க உள்ளனர். கீரன் பொல்லார்ட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மும்பை, சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க விரும்புகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. மற்ற இரண்டு இடங்களைப் பொறுத்தவரை, இன்னும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
தக்கவைக்கப்படும்...
சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் டோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி/சாம் குர்ரான், டெல்லி அணி : ரிஷாப் பண்ட் , பிரித்வி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கீரன் பொல்லார்ட் (பேச்சுவார்த்தை நடக்கிறது), இஷான் கிஷான் (அநேகமாக), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
சி.எஸ்.கே - பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது
28 Apr 2024சென்னை, சி.எஸ்.கே. - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்.29-ல்) தொடங்க உள்ளது.