முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இணைந்து பொங்கல் பரிசு வழங்கினர்

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

கம்பம் : தேனி மாவட்டம் கம்பம் நகரில் பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருள்களை நேற்று தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வினர் இணைந்து வழங்கினர்.

தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருள்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கம்பம் உத்தமபுரம் எம்.டி.  தனி 181 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் (திமுக), பொங்கல் தொகுப்பு பரிசுப்பொருள்களை குடும்ப அட்டைதாரர்ககளுக்கு வழங்கினார். உடன் கூட்டுறவு சங்கத் தலைவர் (அதிமுக ) ஆர்.ராஜாங்கம் கலந்துகொண்டு பொருள்களை வழங்கினார்.

நிகழ்வில் நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் நெப்போலியன், மற்றும் தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வை சேர்ந்த கூட்டுறவு சங்க இயக்குநர்களும்  கலந்து கொண்டனர்.

பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருளை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இணைந்து வழங்கியது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து