முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக அண்ணாமலை உட்பட 415 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியதாக பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிவகங்கையில் வேலுநாச்சியாரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 415 பேர் மீது நோய் தொற்று காலத்தில் அதிகளவில் கூட்டம் கூட்டியது, அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியது உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணி வேலுநாச்சியாரின் 292-வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவகங்கையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறுஅரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.  பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜனதா மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி மற்றும் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நடிகை காயத்ரி ரகுராம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியதாக பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 415 பேர் மீது நோய் தொற்று காலத்தில் அதிகளவில் கூட்டம் கூட்டியது, அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியது உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் சிவகங்கை நகர் காவல்துறையினர் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து