முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 19 மே 2022      தமிழகம்
Rajakannapan-2022-05-19

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம்  செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிருவாகம் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆய்வு செய்தார். அப்போது  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும் என்று   அலுவலர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி/ கல்லூரி விடுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுமாறும் வரும் கல்வி ஆண்டில் அனைத்து விடுதிகளிலும் ஒப்பளிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறையாமல் மாணவர்களை தங்க வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு)  மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையும் கேட்டுக்கொண்டார். 

இந்த ஆய்வுக் கூட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலர்  கார்த்திக்,  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் துறைமுகம் காஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் அனில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் முனைவர். மா.மதிவாணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலர் சம்பத்,  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் இரா.நந்தகோபால் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து