முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எல்.வி. சி-20 வரும் 25-ல் ஏவ இந்தியா முடிவு

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீஹரிகோட்டா, பிப். 17 - ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 25 ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி-20 ராக்கெட் மூலம் 7 செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கை கோள்களில் இரண்டு செயற்கை கோள்கள் கனடா நாட்டிற்கும் இரண்டு ஆஸ்திரியா நாட்டிற்கும் சொந்தமானவை. ஒரு செயற்கை கோள் இங்கிலாந்து நாட்டிற்கும், ஒன்று டென்மார்க் நாட்டிற்கும் சொந்தமானவை. இவற்றோடு இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சரள் செயற்கை கோளும் விண்ணில் பாய்கிறது. 7 செயற்கை கோள்கைகளும் சுமார் 700 கிலோ எடை கொண்டது. இவற்றை சுமந்து கொண்டு வரும் 25 ம் தேதி மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி-20 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. 

சூரிய வட்டப்பாதையில் பூமியில் இருந்து சுமார் 785 கி.மீட்டர் உயரத்தில் இந்த 7 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. இதற்காக வரும் 22 ம் தேதியிலிருந்து 25 ம் தேதி வரை 59 மணிநேர கவுண்ட் டவுன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்