முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம்: பிரதமர் ஷேபாஸ் செரீப் கடும் கண்டனம்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2022      உலகம்
Shahbaz-Sharif 2022 11 17

பாகிஸ்தானின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பயங்கரவாதம் தொடர்கிறது என்று அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் செரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பயங்கரவாதம் தொடர்கிறது என்று லக்கி மார்வாட் தாக்குதலுக்கு பிரதமர் ஷேபாஸ் செரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் செரீப் கூறியதாவது- 

பயங்கரவாதம் பாகிஸ்தானின் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. நமது ஆயுதப் படைகளும், காவல்துறையும் வீரத்துடன் போராடி வருகின்றன. லக்கி மார்வாட்டில் போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து