முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேசானில் 10,000 பேர் பணிநீக்கம்: இ-மெயில் தகவலால் ஊழியர்கள் அதிர்ச்சி

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2022      உலகம்
amazon-2022-11-17

10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம் அவர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளது. 

 சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசானும் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. 

பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும். அமேசான் நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது 10 ஆயிரம் பேரை நீக்கி அதை உறுதிப்படுத்தியது. பணியில் இருந்து நீக்கியது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் அந்த நிறுவனம் தகவலையும் அனுப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து