முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் கடலில் அணு கதிர்வீச்சு 20 ஆயிரம் மடங்கு அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ,ஏப்.24- ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் அணு கதிர்வீச்சு பசிபிக் கடலில் கலந்து வருகிறது. இது ஆபத்தான அளவை காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கார்பரேசனுக்கு சொந்தமான இந்த அணு மின் நிலையத்தில் இருந்து 5 ஆயிரம் டொர்பிகியூசெல் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆண்டு கடலில் கலக்க அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகமாகும். கதிர் வீச்சு கழிவின் அளவு 520 டன் அளவுக்கு இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. 

அணு மின் நிலையத்தில் இருந்து இப்போதுதான் முதல் முறையாக வெளியாகும் கதிர்வீச்சு அளவு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ம் தேதியில் இருந்து ஒரு வாரத்தில் இந்த அளவுக்கு கதிர்வீச்சு கடலில் பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் கடலில் இப்போது பரவியதாக தெரிவிக்கப்படும் அளவை காட்டிலும் அதிக அளவு கதிர்வீச்சு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கடலில் அணு கதிர்வீச்சு பரவி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்