எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.- 25 - இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசை மட்டும் ஈழத்தமிழர்கள் வெறுக்கவில்லை. தங்களை காப்பாற்றுவார்கள் என்று ஏங்கித்தவித்த தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான் அதிகமாக வெறுக்கிறார்கள். இனி மேல் பிறர்மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்ளும் குள்ளநரி தந்திரம் கருணாநிதிக்கு எடுபடாது என்று விஜயகாந்த் காட்டமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கபட நாடகம் யார் ஆடினாலும் கண்டிக்கத்தக்கது. அதுவும் பாமர மக்களை திசை திருப்பும் வகையில் அரசியல் தலைவர்கள் கபட நாடகம் ஆடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. சான்றாக விடுதலைப் புலி இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கண்டன ஊர்வலம் நடத்தி இரத்தக் கண்ணீர் வடித்தனர்.
தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழின வாழ்வை விட முதலமைச்சர் பதவி பெரிது என்று கருதிய அவர், காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்து, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாக தெரிவித்துவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை, இனப் படுகொலையும் தவிர்க்கப்படவில்லை. அந்த சிதம்பரம் கருணாநிதியிடம் சொன்ன சிதம்பர இரகசியம் என்ன என்பதை கருணாநிதி வெளியிடுவாரா?
போர் தொடர்ந்தபொழுது கருணாநிதி, மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று மழுப்பினாரே, அது கபட நாடகம் இல்லையா?
அப்பாவித் தமிழ்ப் பெண்களை கற்பழித்தது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது, தமிழ் மக்களை கடத்திக் கொன்று காணாமல் செய்தது, ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழர்கள் மீது குண்டுமாரி பொழிந்தது, உணவு வழங்காமல் தமிழர்களை பட்டினி போட்டு சாகடித்தது, மருந்துகளும், சிகிச்சையும் இல்லாமல் காயமுற்ற மற்றும் நோயுற்ற தமிழர்களை அப்படியே சாகவிட்டது, இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நிருபர்களை அனுமதிக்காமல் அவர்களை பயமுறுத்தி வெளியேற்றியது போன்ற மனித உரிமை மீறல் மற்றும் இனப் படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க இலங்கை அரசு எவ்வளவோ முயன்றும், வரும் 25.4.2011 அன்று(இன்று) ஐ.நா. மன்றம் இந்த குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட உள்ளது. இந்தப் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. எனினும் அவர், ஏற்கனவே 1991இல் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஆட்சியை இழந்ததாகவும், இப்பொழுது மூன்றாவது முறையும் நான் ஆட்சியை இழந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கின்றேனோ அவற்றை எல்லாம் செய்து முடிக்காமலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும் என்று புலம்பியுள்ளார்.
ஆட்சி போனால் திரும்பப் பெறலாம். ஆனால் போன உயிர்களைத் திரும்பப் பெற முடியுமா?
ஐ.நா. மன்றம் இந்த உண்மையை உணர்ந்து சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்தே ராஜபக்சேயை போர்க் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ஆனால் முதலமைச்சர் கருணாநிதியோ தனது அணியில் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி மகிந்தே ராஜபக்சேயுடன் கை குலுக்க வைக்கிறார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் வாழ கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இந்த சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. திடீரென்று ஒரு நாள் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் மூலம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி காலையில் கைது செய்து மாலையில் விடுவித்தார். இடைவேளை உண்ணாவிரதம் போல இதுவும் ஒரு கபட நாடகம் அல்லவா? இன்றும் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களின் அழுகிய பிணங்கள் கடற்கரையில் ஒதுங்குகின்ற நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிதான் கருணாநிதி ஆட்சியில்.
தனது பிள்ளை மத்திய மந்திரி அழகிரி என்றால் எங்கே கைது செய்து விடுவார்களோ என்று முன் கூட்டியே அவர் பெயிலில் உள்ளார். இன்னொரு மத்திய மந்திரி ராஜா கேட்பாரின்றி திகார் ஜெயிலில் உள்ளார். கேட்டால் ஒவ்வொரு nullநீதிமன்றத்தில் ஒவ்வொரு வகையான தீர்ப்பு இல்லையா என்பார். கிடைக்கின்ற விவரங்களின் அடிப்படையில் வழங்கப்படுவது தீர்ப்பு. விவரங்கள் தவறாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்கிறபொழுது தீர்ப்பு மாற்றத்திற்கு ஆளாகிறது. உண்மை கிடைக்கின்ற வரை மேல் முறையீடு செய்ய வேண்டிய கருணாநிதி அரசு, முன்னாள் தி.மு.க. எம்.பி., தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் எங்கே உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தால்தான் மேல் முறையீடு செய்யவில்லையா?
தேடப்படும் கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. கருணாநிதி அவர் மூலம்தான் இலங்கையில் நாடாளுமன்ற குழுவின் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். 1956ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் கருணாநிதி இலங்கைத் தமிழர் தொண்டுக்கு நற்சான்று அளிக்க வேண்டியவர்கள் யார்? இங்குள்ள தமிழர்கள் அல்ல, இலங்கையில் குறிப்பாக இனப் படுகொலைக்கு ஆளான ஈழப் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.
போரின் உச்சக்கட்டத்தில் அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள்? தமிழ்நாடும், அதன் முதலமைச்சர் கருணாநிதியும் தங்களை காப்பாற்றுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் காப்பாற்றாதது மட்டுமல்ல, தமிழினப் படுகொலைக்கும் கருணாநிதி துணை போனார் என்ற துரோக வரலாறுதான் ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த பாடமாகும். அவர்கள் இன்று வெறுப்பது இலங்கை அரசுக்கு துணை போன இந்திய அரசை மட்டுமல்ல, தமிழனாகப் பிறந்து தமிழ் இனத்துக்கே துரோகம் செய்த தமிழ் இனத் துரோகி கருணாநிதியைத்தான்.
பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் குள்ளநரி தந்திரம் இனி எடுபடாது. தமிழ் இன வரலாற்றில் துடைத்தெறிய முடியாத தமிழினப் படுகொலை என்ற களங்கத்திற்கு கருணாநிதி முழு முதற்காரணம் என்பதை வரலாறு தூற்றும், வருங்கால தமிழினம் தூற்றும். உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் தூற்றுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
13 Mar 2025சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வ
-
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
13 Mar 2025சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை: தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு: கோவை பாரதியார் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் வழக்கு
13 Mar 2025கோவை: கோவை பாரதியார் பல்கலையில் தொழில்நுட்ப உபகரணங்களில் முறைகேடு நடந்ததாக முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
13 Mar 2025சென்னை: பட்ஜெட் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பட்ஜெட்டில் இலச்சினை மாற்றம் ஏன்?: தமிழ்நாடு அரசு விளக்கம்
13 Mar 2025சென்னை: தமிழக பட்ஜெட்டில் ரூபாய் இலச்சினை `₹' என்பதற்கு பதில் `ரூ' என மாற்றப்பபட்டதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
இந்திய எல்லையில் பாக்., டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள்பறிமுதல்
13 Mar 2025ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்த
-
முதல்முறை தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்..?
13 Mar 2025சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு பவுன் ரூ. 65,000-ஐ நெருங்கியது:தங்கம் விலை புதிய உச்சம்
13 Mar 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 13) சவரனுக்கு ரூ.440 அதிகரித்து புதிய உச்சத்த்தை தொட்டுள்ளது.
-
உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா
13 Mar 2025மாஸ்கோ: உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தை ரஷியா கைப்பற்றியது.
-
ரோகித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை: டி வில்லியர்ஸ்
13 Mar 2025கேப் டவுன்: சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோகித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை, தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்
13 Mar 2025சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
பதிலளிக்க எம்.எஸ்.டோனி மறுப்பு
13 Mar 2025இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 76 பேர் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்
13 Mar 2025காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள 76 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அதில் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நெல் மூட்டைகளை வைக்க கூடுதல் கிடங்குகளை அரசு கட்ட வேண்டும் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
13 Mar 2025சென்னை: கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கிடங்குகளை கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
13 Mar 2025சென்னை: நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வ
-
மொரிஷியஸ் சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி
13 Mar 2025புதுடெல்லி: அரசுமுறைப் பயணமாக மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
13 Mar 2025காபுல்: ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 1.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
திபெத்தில் நிலநடுக்கம்
13 Mar 2025பெய்ஜிங்: திபெத்தில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி. கோப்பையை நியூசி. விரைவில் வெல்லும்: ரிக்கி பாண்டிங் நம்பிக்கை
13 Mar 2025சிட்னி: ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியூசிலாந்து அணி விரைவில் கோப்பையை வெல்லும் எனக் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானில் ரெயிலை கடத்திய பயங்கிரவாதிகளிடம் இருந்து பயணிகளை மீட்டது குறித்து ராணுவம் தகவல்
13 Mar 2025குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
-
உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு
13 Mar 2025உக்ரைன்: உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
த.வெ.க. வில் விஜய்யின் உதவியாளர் மகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி
13 Mar 2025சென்னை: தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
மதுரையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
13 Mar 2025மதுரை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.